ஞாயிறு, 8 நவம்பர், 2009

நாட்டைக் குறிஞ்சி தமிழ்ப்பண் பற்றிய விளக்கம் - சாருலத்தா மணி

நாட்டைக் குறிஞ்சி தமிழ்ப்பண் பற்றிய விளக்கம் -
சாருலத்தா மணி

தமிழ்கூறு நல்லுலகில் தமிழிசை தொடர்பாக இதோ ஒரு புதிய வலைப்பூ.


தமிழ்கூறு நல்லுலகில் தமிழிசை தொடர்பாக இதோ ஒரு புதிய வலைப்பூ.

முரல்(சுரம், பண், மெட்டு, தாளம் என்னும் நாற்கூறு கொண்ட இன்னிசை முழுவளர்ச்சி யடைந்திருந்தது.

பண் (எழுமுரல்), பண்ணியல் (அறுமுரல் ), திறம் (ஐம்முரல் ), திறத்திறம் (நான்முரல்) என நால் வகைப்பட்ட பண்கள் நரப்படைவால் 11,991 ஆகக் கணிக்கப்பட்டிருந்தன. ஆயப்பாலை, வட்டப்பாலை, சதுரப்பாலை, முக்கோணப்பாலை (திரிகோணப்பாலை) என்னும் நால்வகை முறையில் எழுபெரும்பாலைகளும் அவற்றின் கிளைகளும் திரிக்கப் பட்டன. அத்திரிவு முறைகள், முறையே முழுமுரல், அரைமுரல், கால் முரல், அரைக்கால் முரல் ஆகிய முரல் நிலைகளைத் தழுவியன என்பர். இந்நுட்பங்கள் இற்றை இசைவாணர்க்குத் தெரியாவாறு, ஆரியத்தால் மறையுண்டு போயின.

தோல் துளை நரம்பு உறை (கஞ்சம்) என்னும் நால்வகை இசைக் கருவிகளுள் சிறந்தது யாழ் என்னும் வீணை. யாழ்களுட் சிறந்தது செங்கோட்டியாழ். அதன் வழியினதே இற்றை வீணை. விண்ணெனல் = நரம்பு தெறித்தல். விண் - வீணை. தோலிற் சிறந்தது மத்தளம் (பெரியது) அல்லது மதங்கம் (மிருதங்கம்). துளையிற் சிறந்தது புல்லாங்குழல்.

மொழிஞாயிறு ஞா. தேவநேயப் பாணர்

இத்தகு சீர்மையும் சிறப்பும் தொன்மையும் வாய்ந்த நம் இனத்தின் மொழியின் பெருமையை உணர்த்தும் தமிழிசை பற்றிய அரிய செய்திகளை இவ்வலைப்பூ வாயிலாக நாம் தெரிந்து கொள்வோமாக. தொடர்ந்து பாருங்கள்.

அன்பன்

இரா.திருமாவளவன்.